இந்திய அளவில் காவலர்களுக்கான பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அரசு முடிவு

0 215

இந்திய அளவில் காவலர்களுக்கான பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலம் புனேவில் அனைத்து மாநிலங்களின் டி.ஜி.பிக்கள் மற்றும் ஐஜிக்களுக்கான மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய அமித்ஷா, அனைத்திந்திய காவல் பல்கலைகழகம் மற்றும் அனைத்திந்திய தடயவியல் அறிவியல் பல்கலைகழகம் ஆகியவற்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இந்த பல்கலைகழகங்களின் அங்கீகாரத்துடன் மாநிலங்களில் உறுப்பு கல்லூரிகள் நிறுவப்படும் எனவும் அவர் தெரிவித்தார். தற்போதைய சூழலுக்கு ஏற்ப, இந்திய தண்டனை சட்டம் மற்றும் குற்ற விசாரணை முறை சட்டம் ஆகியவைகளில் மாற்றம் கொண்டு வருவதற்கான முன்னெடுப்பு இது எனவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments