வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.26 கோடி தங்கம்

0 211

ஷார்ஜா மற்றும் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தஞ்சையைச் சேர்ந்த முகமது அஷ்ரப் என்பவரை சோதனையிட்டபோது, 11 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 344 கிராம் தங்கத்தை ஆசனவாயில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல் கொழும்புவில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இலங்கை பயணிகளான அந்துல் அசீஸ், முகமது முஸ்தாக் ஆகியோரிடம் இருந்து 81 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2.08 கிலோ தங்கம் சிக்கியது.

நேற்று முன்தினம் கொழும்புவில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் வந்த முகமது ரிம்ஷத், முகமது ஜாபர் ஆகியோரிடம் இருந்து 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான 902 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments