சிதம்பரம் தீட்சிதருக்கு ஜாமீன்...

0 303

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண் தாக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய  தீட்சிதர் தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மகன் பிறந்தநாளுக்காக நடராஜர் கோவிலில் உள்ள முக்குருணி விநாயகர் ஆலயத்தில் அர்ச்சனைக்காக சென்ற லதா என்பவருக்கும், தீட்சிதர் தர்ஷனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த தீட்சிதர் லதாவை தாக்கி கீழே தள்ளி விட்டதில் காயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

லதா அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் போலீசார் தீட்சிதர் தர்ஷனை தேடி வந்த நிலையில் அவர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அங்கு அவருக்கு ஜாமீன் கிடைத்ததை அடுத்து சிதம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். உரிய ஆவணங்களின் அடிப்படையில் தீட்சிதர் தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments