காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட கலிபோர்னியா மக்களுக்கு இழப்பீடு

0 201

அமெரிக்காவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் 96 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க பசிபிக் கேஸ் மற்றும் எலெட்ரிக் நிறுவனம் சம்மதித்துள்ளது.

கலிபோர்னியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 86 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள், நிறுவனங்கள் எரிந்து நாசமாகின. அங்கு மின்சார சேவை வழங்கிவந்த பசிபிக் கேஸ் மற்றும் எலெட்ரிக் நிறுவனத்தின் தரமற்ற உபகரணங்களாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டு வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

இந்நிலையில், இருப்பிடங்கள் உள்ளிட்டவற்றை இழந்து தவிப்பவர்கள், மீண்டும் சீரமைத்துக்கொள்ள,  சுமார் 96 ஆயிரம் கோடி ரூபாயை பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்க அந்நிறுவனம் முன்வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments