ஹைதி அதிபர் பதவி விலக்கோரி தொடரும் போராட்டம்

0 106

ஹைதியில் உணவு தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை, பணமதிப்பு பலவீனம் மற்றும் ஊழலை கண்டித்து தலைநகர் போர்ட் -ஓ-பிரின்ஸ் நகரில் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்து வருகின்றன.

போராட்டத்தின் போது, உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள், ஹைதி அதிபர் ஜோவெனெல் மோய்சே பதவி விலக்கோரி,குரலெழுப்பியதுடன், ஆங்காங்கே டயர்களை கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக போராட்டம் காரணமாக பள்ளிகள், அரசு அலுவலங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. இன்னிலையில், ஹைதி நாட்டில் 3-ல் ஒரு நபர் அன்றாட உணவுக்கு பெரும் சிரமப்படுவதாக உலக உணவு திட்ட அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments