ஈட்டி கற்றாழை செடி வளர்த்து மண் அரிப்பை தடுக்கும் விவசாயிகள்

0 311

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வயல் ஓரங்களில் ஈட்டி கற்றாழை செடிகளை வளர்த்து, மண் அரிப்பை தடுக்கும் வகையில் புதிய யுக்திகளை கையாண்டு விவசாயிகள் அசத்தியுள்ளனர்.

செல்வநாயகபுரம் கிராமத்தில், அபிராமம் செல்லும் சாலை ஓரமாகவும், கண்மாய் கரை ஓரத்திலும் வயல்களும் விவசாய நிலங்களும் இருப்பதால் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் விவசாயிகள் சுவர் எழுப்புவதற்கு பதிலாக புதிய உத்தியை கையாண்டு வயல் ஓரங்களில் ஈட்டி கற்றாழை செடிகளை வரிசையாக நட்டு வளர்த்து வருகின்றனர்.

வறட்சியிலும் நீரை சேமிக்கும் தன்மை கொண்ட இந்த செடிகள், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அடர்ந்து புதர்போல் வளர்ந்து மண் அரிப்பையும், நிலங்கள் சேதமடைவதையும் தடுப்பதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments