ஆன்லைன் வர்த்தக மையத்தில் கைவரிசை - ஊழியர்கள் கைது

0 385

சென்னை அம்பத்தூரில் ஆன்லைன் வர்த்தகமையத்தில் பணிபுரியும் இளைஞர்கள் இருவர், டெலிவரி செய்ய வேண்டிய செல்போன்களை நூதன முறையில் திருடி நண்பர்களுக்கு விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது.

சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். இவரது நண்பர் ஜான்சன் இருவரும் பட்டரவாக்கத்தில் உள்ள ஆன்லைன் வர்த்தகமையத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களில் வினோத் குமார் பொருட்களை டெலிவிரி செய்யும் பிரிவிலும், ஜான்சன் நிறுவனத்தின் அலுவலக பிரிவிலும் பணிபுரிந்து வந்துள்ளனர்.

தினமும் தனக்கு கொடுக்கப்படும் 20 பொருட்களில் 17 பொருட்களை வாடிக்கையாளரிடம் கொண்டு போய் சேர்க்கும் வினோத் குமார் வாடிக்கையாளரை தொடர்பு கொள்ளவில்லை, வாடிக்கையாளரின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது, வாடிக்கையாளர் வெளியூர் சென்றிருக்கிறார் என தினமும் ஏதாவது காரணம் கூறி மூன்று பொருட்களை நிறுவனத்திடம் ஒப்படைத்து வந்ததாக சொல்லப்படுகிறது.

அப்படி அவர் ஒப்படைக்கும் பொருட்கள் அனைத்தும் நிறுவனத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. அவற்றில் உயர்ரக செல்போன்களை நிர்வாகத்துக்கு தெரியாமல் ஜான்சனுடன் இணைந்து

திருடி வெளி நபர்களுக்கு வினோத் விற்பனை செய்து வந்துள்ளார். வரும் பணத்தில் நண்பர்கள் இருவரும் சமமாக பங்கிட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் நாளடைவில் குறைவதை கணக்கிட்ட நிர்வாக மேலாளர் கமலக்கண்ணன், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்ததோடு, தனக்கு ஜான்சன் மற்றும் வினோத்குமார் ஆகிய இருவர் மீதும் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து வினோத்குமார் மற்றும் ஜான்சன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் நடத்திய கிடுக்குப்படி விசாரணையில், 5 லட்ச ரூபாய் மதிப்பிலான உயர்ரக செல்போன்களை திருடி வெளி நண்பர்களுக்கு விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டு இருக்கின்றனர்.

இவர்களிடமிருந்து 1 லட்சம் 70 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments