சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு அறிவுரை

0 314

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை  தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுவை சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்குகள்,  நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தன. பொன் மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், அவரை மறு நியமனம் செய்ய முடியாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்து,  பொன்.மாணிக்கவேல் தனது  தரப்பு வாதங்களை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments