மாருதி நிறுவனம் கார்கள் விலையை உயர்த்த முடிவு

0 321

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கார்கள் விலையை வரும் ஜனவரி மாதம் முதல் உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.

குறைந்த விலையிலான ஆல்டோ முதல் எக்ஸ்எல்6 என்ற சொகுசு கார் வரை பல்வேறு மாடல்களில் மாருதி நிறுவனம் கார்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியாவில் கார் உற்பத்தியில் சுமார் 50 சதவீத சந்தை பங்களிப்புடன் மாருதி நிறுவனம் முன்னணியில் உள்ளது.

உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதன் காரணமாக கார்கள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் விலை உயர்வு அமல்படுத்தப்படும என்றும், பல்வேறு மாடல்களுக்கு ஏற்ப விலை உயர்வு மாறுபடும் என்றும் மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments