புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்தின் டீஸர் வெளியானது

0 419

புதிய ஜேம்ஸ்பாண்ட் படமான நோ டைம் டூ டை (No Time To Die) படத்தின் டீஸர் வெளியாகி ஏகபோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜேம்ஸ் பாண்ட் ஆக வழக்கம் போல தூள் கிளப்பியிருக்கும் டேனியல் கிரெய்க் இந்தப் படத்திலும் அதகளம் செய்துள்ளதாகத் தெரிகிறது.

அதற்கேற்ப அவரின் பிரத்யேக வாகனமான ஆஸ்டன் மார்டின் டிபி 5 கார் தலைகீழாகச் சுழன்று விழுவதும், பிரமாண்டமான சுவர் மீது பக்கவாட்டில் இருசக்கர வாகனம் மூலம் தாவி ஏறி பறந்து விழுவது போலவும் பின்னர் வழக்கம் போல, துப்பாக்கிச் சண்டை ஏகத்திற்கும் பில்டப் கொடுக்கப்பட்டுள்ளது.

14 விநாடிகள் மட்டுமே ஓடும் டீஸர் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. முன்னதாக இந்தப் படத்தின் கார் விரட்டும் காட்சிகள் ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments