ரன் ஏதும் கொடுக்காமல் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை

0 444

மாலத்தீவிற்கு எதிரான டீ ட்வெண்டி போட்டியில் ரன் ஏதும் விட்டு கொடுக்காமல், 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி நேபாள வீராங்கனை புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், நேபாளம்-மாலத்திவிற்கு இடையேயான டீ20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இரண்டு புள்ளி ஒரு ஓவர் வீசிய நேபாள சுழற்பந்து வீராங்கனை அஞ்சலி சந்த், ரன் ஏதும் விட்டு கொடுக்காமல் மாலத்தீவு வீராங்கனைகள் 6 பேரின் விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்மூலம் டீ ட்வெண்டி போட்டிகளில் சிறந்த பந்துவீச்சு என்ற சாதனையை தனதாக்கிய அஞ்சலி சந்த், ஆட்டநாயகி விருதையும் தனதாக்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments