எட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை...

0 446

சென்னை- சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இத்திட்டத்திற்காக நிலங்களைக் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எட்டுவழிச் சாலை திட்டத்திற்காக பொதுமக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களை எட்டு வாரங்களுக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இதனை எதிர்த்து எட்டுவழிச் சாலை திட்ட அதிகாரி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments