கடற்கரையில் 2 அடி உயரத்திற்கும் மேல் தேங்கிய நுரை

0 923

சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் கடற்பகுதியில், இன்று இரண்டு அடி உயரத்திற்கும் மேல் நுரை அதிகரித்துக் காணப்பட்டது.

கடந்த நான்கு நாட்களாக, கடற்கரை பகுதியில் நுரை பொங்கி வரும் நிலையில், கடற்கரைப் பகுதியில் நுரை தேங்கியுள்ளது. இவை, காற்றில் பறந்து அருகிலுள்ள குடியிருப்புகளுக்கு செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.

நுரையில் உள்ள ரசாயனக் கலப்பை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்வதற்காக, மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகள், கடந்த இரு தினங்களுக்கு முன்பு நுரை மாதிரிகைளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கடல்நீர் ஆய்வாளர்கள், ஆற்றில் அடித்து வரப்பட்டு முகத்துவாரத்தில் தேங்கியுள்ள இராசாயண கழிவுகள், கனமழை காலங்களில் அடித்துச் செல்லப்பட்டு, மொத்தமாக கடலில் கலப்பதாகவும், அலையின் வேகம் காரணமாக நுரை உருவாவதாகவும் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments