11 பெண்களுக்கு பின் பிறந்த ஆண் குழந்தை.. மகிழ்ச்சியில் திளைத்த தம்பதி

0 381

ராஜஸ்தான் மாநிலத்தில் 11 பெண் குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் பெண், 12-வதாக ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

அந்த மாநிலத்தின் சுரு மாவட்டம், ஜாத்சர் நகரை சேர்ந்த 42 வயதான கதி என்ற பெண், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
மருத்துவமனையில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள். அந்த பெண்ணுக்கு இது 12-வது குழந்தை ஆகும். ஏற்கனவே அவர் 11 பிள்ளைகளை பெற்று இருக்கிறார். அனைவருமே பெண் பிள்ளைகள். மூத்த மகளுக்கு 22 வயது ஆகிறது.

இதுவரை 2 மகள்களுக்கு திருமணம் முடிந்து இருக்கிறது. ஆண் குழந்தை பிறந்ததில் கதியும் அவருடைய கணவரும் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமா ‘குட்டி தம்பி’ பிறந்த மகிழ்ச்சியில் 11 சகோதரிகளும் மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments