மோப்ப நாய் கோனனை தாம் நேசிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமிதம்

0 261

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத் தலைவன் அபு பக்கர் அல் பாக்தாதியை, அமெரிக்க படைகள் கண்டுபிடித்து அழிக்க உதவிய மோப்ப நாய் கோனனுக்கு, அதிபர் டொனால்டு டிரம்ப விருதளித்து கெளரவித்தார்.

அதனை செய்தியாளர்கள் மத்தியில் அறிமுகம் செய்து பேசிய அதிபர் டிரம்ப், இந்த மோப்ப நாயை, தாம் நேசிப்பதாகத் தெரிவித்தார். மோப்பநாய் கோனன், உலகின் ஆகச்சிறந்த நாய்களுள் ஒன்றாக திகழ்வதாகவும், இது தமக்கு பெருமையளிப்பதாகவும் டிரம்ப் கூறினார்.

சிரியாவில் கடந்த மாதம் மறைவிடம் ஒன்றில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி பதுங்கியிருந்தான். அவனது மறைவிடத்தை மிக நேர்த்தியாக காட்டிக்கொடுத்த கோனன், தமக்கு ஏற்பட்ட காயத்துடன், அவனை அழித்தொழிப்பதில் பெரும் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments