கொடுங்கையூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளளவு உயர்வு

0 224

கொடுங்கையூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளளவை 60 எம்.எல்.டி ஆக உயர்த்தி திருத்தப்பட்ட நிதியாக 637 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பொதுமக்களின் பயன்பாடு மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீரை வினியோகம் செய்ய கொடுங்கையூர் மற்றும் கோயம்பேட்டில் தலா 45 எம்.எல்.டி கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, கொடுங்கையூர் சுத்திகரிப்பு நிலையம் தற்போது செயல்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில் கொடுங்கையூர் சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளளவை 60 எம்.எல்.டி.யாக உயர்த்தி தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்திருந்த நிலையில் அதற்கான திருத்த மதிப்பீடு தயார் செய்து, திருத்தப்பட்ட நிதியாக சுமார் 637 கோடி ரூபாய்க்கு ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் கோயம்பேட்டில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் வரும் 29ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments