தண்டவாளத்தில் "காந்த பேரிங்"

0 631

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, ரயில் தண்டவாளத்தில் காந்த பேரிங் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஐதராபாத்திற்கு நேற்று மாMagnetic bearingலை புறப்பட்ட பினாகினி விரைவுரயில், ஆயர்பாடி ரயில்வே மேம்பாலம் மீது சென்றபோது திடீரென என்ஜின் குலுங்கியது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில் ஓட்டுநர் ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து விட்டு கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தினார்.  இதனைத் தொடர்ந்து சென்னையிலிருந்து விரைந்து வந்த ரயில்வே பணிமனை பொறியாளர்கள் அந்த ரயில் என்ஜினை ஆய்வு செய்தபோது அதன் சக்கரம் ஒன்றில் காந்தம் ஒன்று சிக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்புத்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், காந்த பேரிங்கை மர்ம நபர்கள் வைத்திருக்கலாம் என தெரிய வந்தது. அங்கிருந்த தடயங்களை சேகரித்த ரயில்வே பாதுகாப்பு புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  ரயில் ஆற்றுப்பாலத்தில் குறைந்த வேகத்தில் ரயில் இயக்கப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments