தீவிரவாதிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் ராணுவ வீரர் உயிரிழப்பு

0 270

ஜம்மு காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளின் கண்ணிவெடியில் ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.

பாலன்வாலா என்னுமிடத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் கண்ணிவெடியில் சிக்கி காயமடைந்தனர். இதில் ஆக்ராவைச் சேர்ந்த சந்தோஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 3 வீரர்களுக்கு உதம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய ராணுவ வீரர்கள் உரிய பதிலடி தந்தனர். ஒரு மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்ததாகவும், பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச் சூடு மற்றும் பீரங்கிக் குண்டு தாக்குதலுக்கு தக்க பதிலடி தரப்பட்டதாகவும் ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments