பத்ரிநாத் கோயில் நடை இன்று சாத்தப்பட்டது

0 283

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்திலுள்ள பிரசித்து பெற்ற பத்ரிநாத் கோயில் நடை இன்று சாத்தப்பட்டது.

கார்வால் மலைப்பகுதியில் 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள அக்கோயில் நடை, குளிர்காலம் தவிர்த்து எஞ்சிய 6 மாதங்கள் பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டிருக்கும். அதன்படி கடந்த மே மாதம் 10ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது.

இந்நிலையில் குளிர்காலத்தையொட்டி கோயில் நடை இன்று மாலை சுமார் 5 மணியளவில் சாத்தப்பட்டது. நடை சாத்தப்படுவதை அடுத்து, கோயில் ஏராளமான வண்ண மலர்களாலும், விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. கோயிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments