மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்க சீரமைப்பு பணிகள்

0 163

சென்னையில் மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுப்பதற்கான மூன்றாவது கட்ட சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அடையாறு ஆற்றின் 3வது கட்ட மறுசீரமைப்பு பணிகள், திருவிக பாலம் முதல் முகத்துவாரம் வரை நடைபெறுகிறது. இதை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் பேசிய ராதாகிருஷ்ணன், சென்னையில் வடிகால்களை ஆழப்படுத்தும் பணி மூன்றாவது கட்டமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

ஆறுகளில் கழிவுகள் சேர்வதால், கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் அடைப்புகள் ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாக ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments