ரஷ்யாவுடன் இணைந்து தயாரிக்கப்பட உள்ள ஹெலிகாப்டர்கள் - இந்திய உதிரி பாகங்கள் அதிக அளவில் இடம்பெற நடவடிக்கை

0 245

ரஷ்யாவுடன் இணைந்து தயாரிக்கப்பட உள்ள கேஏ-226டி ஹெலிகாப்டர்களில், மேக் இன் இந்தியா திட்டத்தின் படி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாகங்கள் அதிக அளவில் இடம்பெற வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவின் ஹெச்ஏஎல் நிறுவனமும், ரஷ்ய ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து ஐஆர்ஹெச்எல் என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளன. இந்த நிறுவனம், கேஏ-226டி எனக் குறிப்பிடப்படும் காமோவ் ரக ஹெலிகாப்டர்களை தயாரித்து இந்திய ராணுவத்திற்கு வழங்க உள்ளது.

200 ஹெலிகாப்டர்களில் 60 ஹெலிகாப்டர்களை ரஷ்யா நேரடியாக வழங்குகிறது. மீதமுள்ள 140 ஹெலிகாப்டர்கள்,  ஹெச்ஏல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட உள்ளன. இந்த ஹெலிகாப்டர்களில் சுமார் 60 சதவீதம் அளவுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாகங்கள், கருவிகள், ஆயுதங்கள் இடம்பெற உள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments