குழந்தைகள் தினம்- ஒருமணி நேரம் செல்போன்கள் அணைக்கப்பட்டன

0 259

குழந்தைகள் தினத்தை ஒட்டி செல்போனை ஒருமணி நேரம் அணைத்து குழந்தைகளுடன் பேசுமாறு பள்ளிக்கல்வித்துறை விடுத்த கோரிக்கைக்கு பெற்றோரிடையே நல்ல வரவேற்பு காணப்பட்டது.

குழந்தைகளுடன் பெற்றோர் மனம் விட்டுப் பேசவேண்டும் என்பதற்காக குழந்தைகள் தினத்தில் பெற்றோர் செல்போனை ஒருமணி நேரம் அணைத்து வைக்குமாறு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை கேட்டுக் கொண்டது

இதற்கான முயற்சியை முன்னெடுத்த parent circle என்ற அமைப்பு விடுத்த அழைப்பின் பேரில் நேற்று இரவு ஏழரை மணி முதல் எட்டரை மணி வரை செல்போன்கள் அணைக்கப்பட்டன.
இந்த முயற்சிக்கு பெற்றோரிடையே நல்ல வரவேற்பு காணப்பட்டது

வாரத்திற்கு ஒருநாள், நாள் தோறும் ஒருமுறை என கைப்பேசியை அணைத்து குழந்தைகளுடன் உறவை நெருக்கமாக்கிக் கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments