சுங்கத்துறை அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை

0 275

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், சென்னை சுங்கத்துறை அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சுங்கத்துறையில் அதிகாரியாக பணியாற்றிய ஜெக்மோகன் மீனா, 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 15 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. 

சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வசந்தி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜெக்மோகன் மீனாவுக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும், அவரது மனைவி மகள் உள்ளிட்ட மற்ற இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். மூவருக்கும் சேர்த்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments