குடியரசுத் தலைவர் ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல்-சிவசேனா

0 128

மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் என சிவசேனா விமர்சித்துள்ளது.

பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் என வரிசையாக ஆளுநர் அழைப்பு விடுத்தும் உரிய நேரத்தில் யாரும் ஆட்சியமைக்க முன்வராததால் மகாராஷ்டிரத்தில் நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ஏற்கெனவே வகுக்கப்பட்ட திட்டத்தின்படி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாக  சிவசேனாவின்  அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னா மத்திய அரசை சாடியுள்ளது.

மாநிலத்தில் அதிகாரம் இன்னமும் மறைமுகமாக பாஜகவின் கைகளிலேயே உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுவிட்டதாக தேவேந்திர பட்னாவிஸ் முதலைக்கண்ணீர் வடிப்பதாகவும் அதில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில், தற்போது நடைபெறும் அரசியல் ஆட்டத்தை கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தி கட்டுப்படுத்தி, முடிவுகள் அதன் உத்தரவுப்படியே எடுக்கப்பட்டது போல தெரிவதாகவும் சிவசேனா கூறியுள்ளது.

ஆளுநர் மாளிகை சென்று ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கோரிய போது, உரிய மரபு பின்பற்றப்படவில்லை என்றும், ஆனால் தற்போது அவர் ஆட்சி அமைக்க ஆறு மாத கால அவகாசம் வழங்கியிருக்கிறார் என்றும் சாம்னாவில் கிண்டலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments