பாடகி சுசித்ரா மீட்பு.. குடும்பத்தினரைக் கண்டு அச்சம்?

0 881

காணாமல் போனதாகக் கூறப்பட்ட பின்னணி பாடகி சுசித்ரா, சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர விடுதியில் இருந்து மீட்கப்பட்டார். 

சுச்சி லீக்ஸ் என்ற பெயரில், சினிமா பிரபலங்களின் அந்தரங்கங்கள் வெளியானது. இதன் பின்னணியில் சுசித்ரா இருபபதாக அப்போது பேசப்பட்டது. ஆனால் அதனை சுசித்ரா மறுத்தார்.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையைத் தொடர்ந்து, சுசித்ராவின் கணவரான, யாரடி நீ மோகினி பட நடிகர் கார்த்திக் தனது மனைவியை விவாகரத்து செய்து பிரிந்து சென்று விட்டார். இதை அடுத்து அடையாறில் உள்ள வீட்டில் சுசித்ரா தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் ,கடந்த நான்கு நாட்களாக சுசித்ராவைக் காணவில்லை என்று, அவரது சகோதரியான சுனிதா ராமதுரை என்பவர், அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்டு வழக்குப்பதிவு செய்த போலீசார் செல்போன் எண்ணை வைத்து சுசித்ராவைத் தேடி வந்தனர்.

அவரது செல்போன் எண்ணின் இருப்பிடம் தியாகராய நகரில் உள்ள விடுதியைக் காட்டியது. அந்த இடத்திற்குச் சென்ற போலீசார் சுசித்ராவை மீட்டனர். அப்போது தனது சகோதரியை பார்த்து சுசித்ரா பலமாக சத்தமிட்டதாகக் கூறப்படுகிறது.

தனது குடும்பம் தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் வெளி உலகிற்கு காட்ட முயற்சிப்பதாகவும், தன்னை ஏதாவது செய்து விடுவார்கள் என்று சுசித்ரா போலீசிடம் அச்சம் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதை அடுத்து அவரை மீட்ட போலீசார், அவரது விருப்பப்படி கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சுசித்ராவை அனுமதித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments