ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட மேலும் தடை நீட்டிப்பு

0 168

ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட வருகிற 22ஆம் தேதி தடை விதித்துள்ள உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒத்திவைத்திருக்கிறது.

2016ஆம் ஆண்டு தேர்தலில் ராதாபுரம் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்ட இன்பதுரை, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவுவை, 49 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதை எதிர்த்து அப்பாவு தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, தபால் வாக்குகள் மற்றும்  3 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டன.

இதை எதிர்த்து, அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தொடர்ந்த வழக்கில், வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட,  உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட வருகிற 22ஆம் தேதி வரை தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அன்றைய தினத்திற்கு, வழக்கின் விசாரணையையும், உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments