தமிழக அரசின் அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரிய தேமுதிக மனு வாபஸ்

0 306

தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட 29 மனுக்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திரும்பப் பெற்றனர்.

பொதுக்கூட்டங்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களுக்கு எதிராகவும் அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா மீது பல மாவட்ட நீதிமன்றங்களில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நிலுவையில் உள்ள அந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்த், பிரேமலதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 29 மனுக்கள் நீதிபதிகள் ஆதிகேசவலு, நிர்மல்குமார் முன்பு தனித்தனியாக விசாரணைக்கு வந்தது.

அப்போது அனைத்து மனுக்களையும் வாபஸ் பெறுவதாக விஜயகாந்த் மற்றும் பிரேமலதா தரப்பில் தெரிவிக்கப்பட்டு மனு தாக்கல் செய்யபட்டது. இதனையடுத்து நீதிபதிகள் மனுக்களை வாபஸ் பெற்ற அனுமதி அளித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments