7 பேப்பயல்கள் கைது.. நள்ளிரவில் அட்டூழியம்..! விபரீதமான விளையாட்டு

0 1151

முக நூலில் லைக்குகளை பெற வேண்டும் என்பதற்காக  நள்ளிரவில் பேய் வேடமிட்டு வாகனங்களை மறித்தும், சாலையோரம் தூங்கியவர்களின் கழுத்தை கடித்தும் அச்சுறுத்திய 7 மாணவர்கள் பெங்களூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

நள்ளிரவு வேலை ... நிசப்தமான நேரம்... தெருவிளக்குகள் எரிந்து கொண்டிருக்கும் போதே உடையெல்லாம் ரத்தத்துடன் பேய்கள் போல வாகனத்தை மறிப்பது இந்த கும்பலின் வேலை..!

சிலர் எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்று அதிவேகத்தில் செல்ல, இந்த கும்பலுக்கு பயந்து பல வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வந்த வழியே திரும்பிச்சென்ற சம்பவங்களும் அரங்கேறி உள்ளன

இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் சாலையோரம் படுத்து உறங்குவோரின் கழுத்தை ஜாம்பி போல கடித்து எழுப்பி, பயமுறுத்துவது போல சத்தமிடுவது இவர்களின் வாடிக்கை

பெங்களூரு யஸ்வந்த்பூர் பகுதியில் இவர்களின் அட்டூழியத்தால் உண்மையிலேயே பேய் நடமாட்டம் இருப்பது போல தகவல் பரவதொடங்கியது. இதையடுத்து அப்பகுது காவல்துறையினர் துணிச்சலுடன் விசாரணையில் இறங்கிய போது அங்கு சுற்றி திரிவது பேய்கள் அல்ல என்பதை கண்டறிந்தனர்.

இதய பலவீனமானவர்கள் இதை கண்டு பயந்து உயிரிழந்திருந்தால் யார் பொறுப்பு ? என்று கேள்வி எழுப்பிய காவல்துறையினர் நள்ளிரவில் நகரில் அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரிந்து பொதுமக்களை பயமுறுத்தியதாக வழக்கு பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments