வாகனத் தணிக்கையின்போது போலீசார் தாக்கி மூதாட்டி இறந்ததாகப் புகார் - போலீசார் விசாரணை

0 2400

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் இருசக்கர வாகன ஓட்டியை போலீசார் தாக்க முயன்றபோது பின்னால் அமர்ந்திருந்த மூதாட்டி கீழே விழுந்து இறந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த செந்தில், தாயார் அய்யம்மாளை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு வேப்பூர் நோக்கிச் சென்றுள்ளார். கள்ளக்குறிச்சி அருகே சட்டம் ஒழுங்கு போலீசார் அவரைத் தடுக்க முயன்றுள்ளனர்.

சற்று தூரம் சென்று வாகனத்தை நிறுத்திய செந்திலை போலீஸ் ஒருவர் அடிக்க முயன்றதாகவும் அது தவறுதலாக அய்யம்மாள் மீது பட்டு, அவர் கீழே விழுந்து இறந்ததாகவும் சொல்லப்படுகிறது.

சம்மந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  ஆனால் செந்தில் குடிபோதையில் தலைக்கவசம் அணியாமல் வேகமாக வாகனம் ஓட்டி வந்ததாகவும் பிரேக் பிடித்த அதிர்ச்சியில் மூதாட்டி கீழே விழுந்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments