தமிழகத்தில் பத்திரிகையாளர் நலவாரியம் ஜனவரி மாதத்திற்குள் தொடங்கப்படும் -அமைச்சர் கடம்பூர் ராஜூ

0 264

தமிழகத்தில் பத்திரிகையாளர் நலவாரியம் ஜனவரி மாதத்திற்குள் தொடங்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மிளகுப்பாறையில் பெரும்பிடுகு முத்தரையர், தியாகராய பாகவதர், ஏ.டி.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அரசு சார்பில் மணி மண்டபம் கட்டவுள்ள இடத்தை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சர்கள் வலுவோடு வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments