வழக்கறிஞர்கள் போராட்டம்.. நீதிமன்றங்கள் மூடல்..!

0 526

டெல்லியில் விசாரணை நீதிமன்றங்கள் அனைத்தும் வழக்கறிஞர்கள் போராட்டத்தால் மூடப்பட்டன.

டெல்லியில் தீஸ் ஹசாரி (Tis Hazari) நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2ம் தேதி வழக்கறிஞர்கள், போலீஸார் இடையே ஏற்பட்ட மோதலில் வழக்கறிஞர் ஒருவர் தோட்டா பாய்ந்து காயமடைந்தார்.

வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இந்த சம்பவத்தில் காவல்துறையினர் தாக்கப்பட்டதை கண்டித்து, டெல்லியில் காவல்துறை தலைமையகம் வெளியே போலீஸார் ஏராளமானோர் சீருடையுடன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், டெல்லியின் பாட்டியாலா ஹவுஸ், சாகேட், ரோஹினியிலுள்ள அனைத்து விசாரணை நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் போராட்டம் 4ஆவது நாளாக நீடித்தது. நீதிமன்றங்களுக்குள் மனுதாரர்கள் யாரையும் வழக்கறிஞர்கள் அனுமதிக்கவில்லை. அதேநேரத்தில் பார் கவுன்சில் ஆப் இந்தியா (bar council of india) அமைப்பு, நாளை முதல் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்துள்ளது.

தீஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள அந்த அமைப்பு, வழக்கறிஞர்கள் குற்றமிழைத்தது தெரிந்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments