அயோத்தி வழக்கு தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்-முஸ்லீம் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

0 310

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் இன்னும் சிலநாட்களில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியின் இல்லத்தில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இஸ்லாமிய கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

நீண்ட நேரமாக நடைபெற்ற இக்கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன. தீர்ப்பு எதுவாக இருப்பினும் அதனை மதித்து ஏற்க வேண்டும் என்று முஸ்லீம் தலைவர்களும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். பரஸ்பர நம்பிக்கை மதநல்லிணக்கம், சகோதரத்துவத்தை கைவிடக் கூடாது என்றும் இக்கூட்டத்தில் ஒருமித்த முடிவு எட்டப்பட்டது.

இதனிடையே அயோத்தி வழக்கின் சமரச குழுவில் இடம் பெற்ற 3 பேரில் ஒருவரான வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இந்தூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தீர்ப்பு வெளியான பின்னர் அனைவரும் அமைதியை காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments