தமிழக மீனவர்களை சிறைபிடித்து ஆந்திர மீனவர்கள் தாக்குவதாக புகார்

0 164

imageநாகை மாவட்ட மீனவர்கள் 9 பேரை சிறைப்பிடித்துள்ள ஆந்திர மீனவர்கள், அவர்களை தாக்குவது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர்கள் 9 பேர் கடந்த 28 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கடந்த ஒன்றாம் தேதி சென்னைக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் தங்கள் பகுதிக்கு வந்ததாக கூறி ஆந்திர மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் நாகை மீனவர்களை சிலர் தாக்குவது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

ஆந்திர மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 9 பேரையும் அவர்களது விசைப்படகையும் மீட்டுத்தர கோரி அக்கரைப்பேட்டை மீனவர்கள் நாகை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments