5 விசைப்படகுகளில் சென்ற 75 மீனவர்களை மீட்க கோரிக்கை

0 174

கியார் புயல் உருவாவதற்கு முன்பாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரியை சேர்ந்த 75 மீனவர்களை போர்க்கால அடிப்படையில் மீட்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த வாரம கன்னியாகுமரியை சேர்ந்த 850 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் 25ம் தேதி அரபிக்கடலில் உருவான கியார் புயல் காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.

அதனை தொடர்ந்து, 845 விசைப்படகுகள் மற்றும் அதில் சென்ற பத்தாயிரம் மீனவர்கள் குஜராத், கோவா, கேரளா துறைமுகங்களில் கரை ஒதுங்கினர்.  இந்நிலையில் எஞ்சிய ஐந்து விசைப்படகுகளில் சென்ற 75 மீனவர்கள் கரை திரும்பாத நிலையில் தற்போது மஹா புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனால் அச்சமடைந்த மீனவர்களின் உறவினர்கள் போர்க்கால அடிப்படையில் காணாமல் போன மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments