குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் மசோதா நிரந்தரமாக ரத்து

0 247

குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் மசோதாவை நிரந்தரமாக ரத்து செய்து, ஹாங்காங் எம்.பிக்கள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். 

இங்கிலாந்தின் காலனியாக இருந்த ஹாங்காங் கடந்த 1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது முதல் ‘ஒரு நாடு, இரு அரசியல் அமைப்பு’ என்ற கோட்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது.

கடந்த 4 மாதங்களுக்கு முன் ஹாங்காங்கில் குற்றஞ்சாட்டப்படுபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிப்பது தொடர்பாக சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து பல ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதையடுத்து மசோதா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டும், மசோதாவை நிரந்தரமாக நீக்குவது உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சர்ச்சைக்குள்ளான அந்த மசோதாவை ஹாங்காங் எம்பிக்கள் அதிகாரபூர்வமாக திரும்ப பெற்றதோடு, அதுதொடர்பான அனைத்து நடைமுறைகளையும் முடித்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments