கர்நாடகாவில் 3 நாட்களாக கொட்டித்தீர்த்து வரும் கனமழை

0 177

கர்நாடகாவில் கனமழை நீடித்து வரும் நிலையில், மழையால் பல்வேறு இடங்களிலும் வீடுகள், சாலைகள் சேதமடைந்துள்ளன.

வடகிழக்கு பருவமழை துவங்கியதை அடுத்து கர்நாடகாவில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. யாத்கிரி பகுதியில் அமைந்துள்ள நாராயண்பூர் சாயா பகவதி அம்மன் கோவிலிலும் வெள்ளநீர் புகுந்துள்ளது.

ஹோசுரு எனும் கிராமத்தில் மழையால் பழைய வீடு ஒன்று இடிந்து விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன. தமிழக - கர்நாடக எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மாதேசுவரன் மலைப்பகுதிக்கு செல்லும் வழியில் பாலார் அருகே மழையால் நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் சேதமடைந்துள்ளன.

இதனால் அந்த வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கர்நாடகாவில் மேலும் சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments