சமூக ஊடகங்களை ஆதாருடன் இணைப்பது தொடர்பான வழக்கு - இன்று மீண்டும் விசாரணை

0 162

சமூக ஊடக கணக்குகளை மத்திய அரசு தணிக்கை செய்ய அனுமதி கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.

பேஸ் புக், வாட்ஸ் ஆப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் உள்ள கணக்குகளை மத்திய அரசு ஆதார் அட்டையுடன் இணைத்து அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அனைத்தையும் ஒன்றாக உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

சமூக ஊடக கணக்கை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு எதிரான ஏராளமான வழக்குகள் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் சமூக ஊடகங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் தானாகவே தனது விசாரணைக்கு ஏற்றுள்ளது.

தமிழக அரசின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், சமூக ஊடகங்களை நடத்தும் வெளிநாட்டு அமைப்புகள் இந்தியாவில் யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று கூறுவதை ஏற்க முடியாது என்று வாதிட உள்ளார்.இந்தியாவின் சட்டங்களையும் விதிமுறைகளையும் சமூக ஊடகங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் வேணுகோபால் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக மத்திய அரசு தனது அறிக்கையை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். பேஸ்புக் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹட்கி தகவல்களை இணைப்பதற்கான தொழில்நுட்பம் இல்லை என்றும், உலகளாவிய தனிநபர் உரிமைகளில் தலையிட இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments