பசுவின் வயிற்றிலிருந்து 52கிலோ பிளாஸ்டிக் அகற்றிய மருத்துவர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு

0 313

சென்னையில் பசுவுக்கு அறுவை சிகிச்சை செய்து இரைப்பையில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை அகற்றிய கால்நடை மருத்துவர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டியுள்ளார்.

திருமுல்லைவாயிலை சேர்ந்த முனிரத்தினத்தின் பசு, தீவனம் உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டது. சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் அந்த பசுவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, வயிற்றிலிருந்து 52 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் அகற்றப்பட்டன.

இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவ குழுவினரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டினார். சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments