அரசு மருத்துவமனையில் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்யும் கருவி விவசாயிக்கு பொருத்தம்

0 182

கோவை அரசு மருத்துவமனையில் விவசாயி ஒருவருக்கு முதன்முறையாக பேஸ்மேக்கர் கருவி, வெற்றிக்கரமாக பொருத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த விவசாயி குப்பண்ணன் அடிக்கடி மயக்கம் வருவதாக கூறி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்தப் போது இயல்பாக இருக்க வேண்டியதை விட குறைவாக, நிமிடத்துக்கு 30 முதல் 40 முறை மட்டுமே இதயம் துடிப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இதையடுத்து விவசாயி குப்பண்ணனுக்கு அறுவை சிகிச்சை மூலம் இதயத்துடிப்பை அதிகரிக்கக் செய்யும் பேஸ் மேக்கர் கருவியை இதயவியல் துறை மருத்துவர்கள் வெற்றிக்கரமாக பொருத்தினர்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கோவை அரசு மருத்துவ கல்லூரி டீன் அசோகன், பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டவருக்கு இதய துடிப்பு குறைந்தால் கருவியில் இருந்து மின்சக்தி கிடைக்க பெற்று இதய துடிப்பு அதிகரிக்கும் என்றார். இதன் மூலம் அவர் 10 முதல் 15 ஆண்டுகள் வரை ஆரோக்கியமாக வாழமுடியும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments