பந்து வீச்சாளர்கள் அசத்தல் - இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா

0 348

ராஞ்சியில் நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இன்னிங்ஸ் வெற்றியை பெறக்கூடிய அளவுக்கு இந்திய அணி வலுவாக உள்ளது.

முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி, துவக்க வீரர் ரோகித் சர்மாவின் இரட்டை சதம் மற்றும் ரகானேவின் சதம் ஆகியவற்றின் உதவியால் 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, இந்திய பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 162 ரன்கள் மட்டுமே எடுத்து பாலோ ஆன் ஆனது. தொடர்ந்து 2ஆவது இன்னிங்சை ஆடிய அந்த அணி மீண்டும் இந்திய பந்துவீச்சாளர்களிடம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இந்திய அணியை விட 203 ரன்கள் பின்தங்கியுள்ளதால் இப்போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியைப் பெறும் சூழல் உருவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments