2ம் நிலை மருத்துவமனைகளில் 1,100 மருத்துவர்கள் நியமனம்

0 500

தமிழகத்தில் 2ம் நிலை மருத்துவமனைகளில் 1,100 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்து நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் 2ம்நிலை மருத்துவமனைகளான மாவட்ட மருத்துவமனை, தாலுகா மருத்துவனைகளில் 1,100 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் 2,345 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு விரைவில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments