ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு மீண்டும் ரயில்பாதை

0 337

ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு மீண்டும் ரயில்பாதை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், அதற்கான மண் ஆய்வுப் பணிகள் தொடங்கியுள்ளன.

ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தனுஷ்கோடி நகரம், 1964ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட புயலால் முற்றிலும் அழிந்து போனது.

அப்போது தனுஷ்கோடி வரையிலான ரயில்பாதையும் கடலில் அடித்துச் செல்லப்பட்டது. இந்நிலையில் தனுஷ்கோடி வரை மீண்டும் ரயில் பாதை அமைக்க ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு, அதற்காக நிதியும் ஒதுக்கியுள்ளது.

மீண்டும் ரயில்பாதை அமைப்பது குறித்து ஏற்கனவே 2 கட்ட ஆய்வுகள் முடிந்துள்ள நிலையில், தற்போது அப்பகுதியில் மண் ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் 10 பேர் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தனுஷ்கோடி வரை மீண்டும் ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments