சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கு புதிய ரயில் தயார்..!

0 423

சென்னை மெட்ரோ ரயில் சேவைக்காக ஆந்திராவில் தயாரிக்கப்பட்ட புதிய ரயில், சென்னைக்கு கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது. 

சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்டப்பணிகள் முடிந்துள்ள நிலையில், இதன் விரிவாக்க பணிகள் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை நடைபெற்றுவருகிறது.

இதனிடையே சென்னை மெட்ரோ ரயில் சேவைக்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் தயாரிக்கப்பட்டு வரும் 10 ரயில்களில் ஒரு ரயிலின் கட்டுமானப்பணிகள் முழுவதுமாக முடிவடைந்தது. இதையடுத்து, அந்த அதிநவீன ரயிலானது ஆந்திராவிலிருந்து சென்னைக்கு அனுப்பப்பட்டது.

வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரயிலை, மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால் கொடியசைத்து அனுப்பிவைத்தார். மீதமுள்ள 9 ரயில்களுக்கான கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் நிறைவடையும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments