இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபர்

0 332

திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை ஒருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த  மனோகரன் என்பவர், இருசக்கர வாகனத்தில் சென்று பொதுஇடங்களில் தேனீர் விற்பனை செய்து வருகிறார்.

அண்மையில் அவர் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள கார் நிறுத்தும் இடத்தில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு தேனீர் விற்க சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து திரும்பியபோது, அவரது இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்தது.

இதனை கண்ட அவர், காவல் நிலையத்தில் புகார் கூறியும், போலீசார் வழக்கு பதியாமல், மனோகரனிடம்  சிசிடிவி பதிவு கொண்டு வர கூறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தனியார் மருத்துவமனை வெளியே வைத்திருந்த கேமராவை மருத்துவமனை உதவியுடன் ஆய்வு செய்தபோது, சிவப்பு நிற சட்டை அணிந்து சென்ற ஒருவர் மனோகரனின்  வாகனத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதனை தற்போது போலீசாரிடம் வழங்கியுள்ள மனோகரன் வழக்கு பதிய கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments