தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

0 318

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முகமூடி கொள்ளையர் கொள்ளையடிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

தாமரைக்குளம் புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் போன்ற பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்ததையறிந்த அலுவலர்கள் இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்தனர்.

அப்போது,  வங்கியில் நுழைந்த முகமூடி கொள்ளையர் பின்பக்க சுவரை துளையிட முயன்றும் முடியாததால், வாயிற்கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைகிறார். இருந்தும், அங்கிருந்த நகை, பணத்தை கொள்ளையடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியதால், வங்கியில் இருந்த ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், 2 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் தப்பியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் முகமூடி கொள்ளையரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments