ஆப்கானிஸ்தான் மசூதியில் இரட்டை குண்டு வெடிப்பு

0 256

ஆப்கானிஸ்தானில் தொழுகையின்போது மசூதியில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பில் 62 உயிரிழந்தனர்.

அந்நாட்டின் நங்கர்கார் மாகாணத்தின் ஹஸ்கா மெய்னா மாவட்டத்தின் ஜாதாரா நகரில் உள்ள மசூதிக்கு வெள்ளிக்கிழமையான இன்று வழக்கம் போல் மக்கள் தொழுகைக்கு சென்றனர்.

தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்து சிதறின. இதில் 62 பேர் உயிரிழந்தனர். இதில் 20 பேர்  நிகழ்விடத்திலேயே பலியாகினர்.

42 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 60 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments