வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தயார்

0 263

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் தயாராக இருப்பதாக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகளுடன் பிரகாஷ் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒவ்வொரு மண்டல அலுவலகங்களிலும் வரும் செவ்வாய்க்கிழமைக்குள் ஆய்வு கூட்டம் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மழைக்கால பிரச்னைகளை கையாள்வதற்கு வாட்ஸ் ஆப் குழு உருவாக்கப்பட்டுள்ளது என்றும், நம்ம சென்னை செயலி மூலமும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறுகையில், வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலமாக பெறப்படும் தகவல்கள் பரிமாறப்பட்டு, அதுதொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வுகாண காவல்துறையினரும் உதவி செய்வார்கள் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments