வங்கேதேச எல்லைப் படை நடத்திய தாக்குதல் தன்னிச்சையானது

0 324

தாங்கள் தாக்குதல் ஏதும் நடத்தாத நிலையிலேயே வங்கதேச எல்லைப் படையினர் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இந்திய எல்லையோர பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய- வங்கதேச எல்லையில் மேற்கு வங்க மீனவர்கள் 3 பேர் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களில் ஒருவரை வங்கதேச காவல் படை கைது செய்தது. இதையடுத்து, மீனவரை மீட்க பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற இந்திய எல்லையோர பாதுகாப்பு படையை சேர்ந்த 6 பேரில் ஒருவரை வங்கதேச பாதுகாப்பு படை சுட்டுக்கொன்றது.

இதுகுறித்து வங்கதேச தரப்பு கூறுகையில்,  இந்திய பாதுகாப்பு படை துப்பாக்கிச்சூடு நடத்தியதால், தற்காப்பு கருதியே பதில் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்திருந்தது. 

இந்த குற்றச்சாட்டை  மறுத்துள்ள இந்திய எல்லையோர பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரி ஒருவர்,  தங்கள் தரப்பிலிருந்து  ஒரு துப்பாக்கிச்சூடு கூட நடத்தப்படவில்லை என்றும்  நேரடி சந்திப்புக்கு அழைப்பு வந்ததை தொடர்ந்தே வங்கதேச எல்லைக்குள் நுழைந்ததாகவும் தெரிவித்தார்.

அங்கு சிறைபிடிக்கப்பட்டிருந்த மீனவர்களை வலுக்கட்டாயமாக மீட்க முயலவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய எல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments