பெண்களின் சாபத்தால்தான் அசாம்கான் மீது வழக்குகள் - நடிகை ஜெயப்பிரதா கடும் விமர்சனம்

0 278

பெண்கள் விடுத்த சாபத்தாலும், கண்ணீராலும் தான் அசாம் கான் இன்று கண்ணீர் சிந்துகிறார் என்று நடிகையும் பாஜக உறுப்பினருமான ஜெயப்பிரதா சாடியுள்ளார்.

நில அபகரிப்பு தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ள சமாஜ்வாதி கட்சியின் ராம்புர் தொகுதி எம்பி அசாம் கான், ஒவ்வொரு கூட்டத்திலும் கண்ணீர் சிந்துவதாக ஜெயப்பிரதா தெரிவித்துள்ளார்.

அசாம் கானின் துன்புறுத்தல்களால் தாம் கண்ணீர் சிந்திய போது தம்மை ஒரு நடிகை என கேலி செய்த அசாம் கான், இப்போது அழுவது ஏன் என்றும் ஜெயப்பிரதா விமர்சித்துள்ளார். அசாம் கானை எதிர்த்து கடந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசம் ராம்புரில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஜெயப்பிரதா தோல்வியை தழுவினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments