அரசு பள்ளிகளில் கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி பாடம் கற்பிக்க உத்தரவு

0 271

அரசு பள்ளிகளில் கண்டிப்பாக கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி பாடம் நடத்த வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் அனுப்பிய சுற்றறிக்கையில், அரசுப்பள்ளி மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்துக் கொள்ள ஏதுவாக ஆண்டுதோறும் கணிதம், அறிவியல், ஆங்கில உபகரணப் பெட்டிகள், அகராதிகள், விளையாட்டுப் பொருட்கள், பயிற்சி கையேடுகள் போன்றவை வழங்கப்படுகின்றன.

ஆனால், வழங்கப்படும் கற்றல் உபகரணங்கள், பொதுமக்களின் பங்களிப்பில் பெறப்படும் தளவாடப்பொருட்கள் போன்றவை பெரும்பாலான பள்ளிகளில் பயன்படுத்தப்படாமல் இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடம் நடத்தினால், அவர்களின் கற்றல் திறன் மேம்படுவதுடன், தேசிய அடைவுத் தேர்வுகளையும் அவர்களால் எளிதாக எதிர் கொள்ள முடியும் என அறிவுறுத்திய பள்ளிக்கல்வித்துறை, பள்ளிகளில் கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி பாடம் நடத்தப்படுகிறதா என்பதை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments